தமிழால் இணைவோம்; செயலால் வெல்வோம்!
தமிழால் இணைவோம்; செயலால் வெல்வோம்! முனைவர் இர. பிரபாகரன் உலகில் சுமார் எட்டுக் கோடித் தமிழர்கள் இருப்பதாகவும் அதில் 6.5 கோடித் தமிழர்கள் இந்தியாவிலும் மற்ற 1.5 கோடித் தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தமிழர்கள் பல நாடுகளிலிருந்தாலும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லாத காரணத்தால் நாம் எல்லா நாடுகளிலேயும் சிறுபான்மையினராகவே பலகாலமாக வாழ்ந்து வருகிறோம். ஒரு இனம் சிறுபான்மையானதாக இருந்தால், பெரும்பான்மையினரின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் அடங்கி வாழவேண்டிய சூழ்நிலையில்தான் அவ்வினம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகில், இனத்தின் அடிப்படையில் நெடுங்காலமாகப் போர்கள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. கடந்த நூற்றாண்டில், இனத்தின் பெயரால் எவ்வளவோ அட்டூழியங்களும் படுகொலைகளும் நடைபெற்றன. ஹிட்லரின் தலைமையில் செர்மானியர்கள் பல்லாயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தார்கள். ஐரோப்பாவில் பால்கன் வட்டாரத்தில் செர்பியர்களுக்கும் மற்ற இனத்தவருக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆயிரக் கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டார்...