வள்ளுவத்தில் புதுமையும் புரட்சியும்
வள்ளுவத்தில் புதுமையும் புரட்சியும் முனைவர் இர . பிரபாகரன் புதுமையும் புரட்சியும் இதுவரை அனுபவிக்காதது , காணாதது , கேள்விப்படாதது , முற்றிலும் புதியது புதுமை என்று கருதப்படுகிறது . சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்க வழக்கங்கள் அல்லது கருத்துகள் ஆகியவற்றிற்கு மாறான கருத்துகள் புரட்சிகரமானவையாகக் கருதப்படுகின்றன . இந்த வரையறை அடிப்படையில் பார்த்தால் , திருக்குறளில் புதுமையான கருத்துகளும் புரட்சிகரமான கருத்துகளும் உள்ளன என்பதை உணரமுடியும் . ...