Posts

Showing posts with the label பெருமிதம் மிகுந்த பெருஞ்சித்திரனார்

பெருமிதம் மிகுந்த பெருஞ்சித்திரனார்

பெருமிதம் மிகுந்த பெருஞ்சித்திரனார் முனைவர் இர. பிரபாகரன் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ள நூல்.   வரலாற்று ஆசிரியர்கள், புறநானூற்றில் குறிப்படப்பட்டிருக்கும் பல செய்திகளை வரலாற்றுச் சான்றுகளாகக் காட்டுகின்றனர்.   புறநானூற்றில் நமக்குக் கிடைத்துள்ள 398 பாடல்களை இயற்றிவர்கள் 157 புலவர்கள்.   அப்பாடல்கள் அரசர், வணிகர், மருத்துவர், மகளிர், மறவர், குறவர், வேளாளர், வேடர், அந்தணர், ஆசிரியர், பொற்கொல்லர், புலவர் என்று அன்றைய சமுதாயத்தில் பல நிலையிலும் பல துறையிலும் இருந்தவர்களால் இயற்றப்பட்டவை. பாடல்களை இயற்றியவர்கள் அறிவிற் சிறந்தவர்களாகவும், புலமை மிக்கவர்களாகவும் இருந்தனர் என்பதற்கு அவர்களின் பாடல்களே சிறந்த சான்றுகளாக உள்ளன.   பாடல்களை இயற்றிய புலவர்களில் சிலர், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பவர்களாகவும், மன்னர்களுக்கு அறிவுரை கூறுபவர்களாகவும், தூதுவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.   உதாரணமாக, கோவூர் கிழார் என்னும் புலவர், சோழன் நலங்கிள்ள...