Posts

Showing posts with the label ஏன் இந்தப் பண்ணித் தமிழ்?

ஏன் இந்தப் பண்ணித் தமிழ்?

ஏன் இந்தப் பண்ணித் தமிழ் ? முனைவர் இர . பிரபாகரன் பண்ணித் தமிழ் தமிழ்நாட்டில் பலரும் தங்கள் பொருளாதார வசதிக்கும் அதிகமாகச் செலவு செய்து , தங்கள் குழந்தைகளை ஆங்கிலத்தில் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் . ஐந்து வயதுக் குழந்தை வீட்டுக்கு வந்து , உயிரோடு இருக்கும் அம்மாவை “ மம்மி ” என்று அழைக்கிறது . அந்தத் தாய் அளவில்லாத   மகிழ்ச்சி அடைகிறாள் . அறியாத வயதில் புரியாததைக் குழந்தை கூறுகிறது . அது போகட்டும் . படித்தவர்கள் என்ன செய்கிறார்கள் ? ” அந்தக் கதவைத் திற ” என்பதற்குப் பதிலாக ” அந்த டோரை ஓபன் பண்ணு ” என்றும் , ” அந்தப் பெட்டியை மூடு ” என்பதற்குப் பதிலாக “ அந்த பாக்ஸை குளோஸ் பண்ணு ” என்றும் , “ என்னைத் தொலை பேசியில் கூப்பிடு ” என்று கூறுவதற்குப் பதிலாக   “ என்னை செல் போனில் கால் பண்ணு ” என்றும் பலரும் பேசுகிறார்கள் . இவர்கள் பேசுவதில் “ பண்ணு ” என்ற வினைச்சொல் மட்டுமே தமிழ் . இந்தக் கொடுந்தமிழுக்குப் பெயர்தான் பண்ணித் தமிழ் !   இது ” தமிங்கிலம் ” அல்லது ” தங்கிலீஷ் ” என்றும் அழைக்கபடுகிறது . தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று கருதப்படும...