Posts

Showing posts with the label தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்

தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்

தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார் முனைவர் இர. பிரபாகரன்   சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி , வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர்.   கரிகாலன் இறந்த பிறகு , சோழநாட்டை இரண்டாகப் பிரித்து , மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும் , வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர்.   மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோணை என்று ஒரு மகளும் இருந்தனர்.   வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு க் கிள்ளி வளவன் , நலங்கிள்ளி , மாவளத்தான் என்று மூன்று மகன்க ள் இருந்தனர்.   மணக்கிள்ளியின் மகள் நற்சோணை , சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் புரிந்தாள்.   சேரன் செங்குட்டுவனும் , சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும்   இமயவரம்பனுக்கும் நற்சோணைக்கும் பிறந்த இருபிள்ளைகள்.           ஒரு சமயம் , வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே போர் நடந்தது.   அப்போரில் அவ்விர...