Posts

இன்றைய உலகுக் குறள் கூறும் அறிவுரைகள்

                                                இன்றைய உலகுக் குறள் கூறும் அறிவுரைகள் முனைவர் இர . பிரபாகரன் முன்னுரை இவ்வுலகில் மனிதர்கள் நெடுங்காலமாகவே தங்களுடைய வாழ்க்கையில் பலவகையான துன்பங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் ; மற்ற உயிரினங்களும் பல இன்னல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன . இத்தகைய துன்பங்களுக்கு முடிவுகாண வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐக்கிய நாடுகளின் அவையைச் சார்ந்த அறிஞர்கள் 2015 ஆம் ஆண்டு , நிலையான வளர்ச்சிக்கான பதினேழு இலக்குகளை முடிவு செய்தார்கள் .  ஆங்கிலத்தில் , அவை ‘United Nations Organization’s Sustainable Development Goals’ என்று அழைக்கப்படுகின்றன . அந்த இலக்குகளை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்பது அவர்களின் திட்டம் . அந்த இலக்குகளை அடைந்தால் உலகில் வறுமை , பிணி , வன்முறை மற்றும் சுற்றுச் சூழல் சீரழிவு ஆகியவற்றால் வரும் நான்கு பெரும் துன்பங்களையும் பெருமளவில் குறைத்த...