Posts

Showing posts from October, 2018

தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்

தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார் முனைவர் இர. பிரபாகரன்   சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி , வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர்.   கரிகாலன் இறந்த பிறகு , சோழநாட்டை இரண்டாகப் பிரித்து , மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும் , வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர்.   மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோணை என்று ஒரு மகளும் இருந்தனர்.   வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு க் கிள்ளி வளவன் , நலங்கிள்ளி , மாவளத்தான் என்று மூன்று மகன்க ள் இருந்தனர்.   மணக்கிள்ளியின் மகள் நற்சோணை , சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் புரிந்தாள்.   சேரன் செங்குட்டுவனும் , சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும்   இமயவரம்பனுக்கும் நற்சோணைக்கும் பிறந்த இருபிள்ளைகள்.           ஒரு சமயம் , வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே போர் நடந்தது.   அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர்.   வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இறந்த பிறகு , தன் தந்தையைப்

காந்தர்வமணமும் களவொழுக்கமும்

காந்தர்வமணமும் களவொழுக்கமும் (குறிஞ்சிப்பாட்டு)   முனைவர் இர . பிரபாகரன்   இந்துமதத்தின் புராணங்களிலும் இதிகாசங்களிலும் எட்டு வகையான திருமணங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை வடமொழியில் பிரமம் , பிரசாபத்தியம் , ஆரிஷம் , தெய்வம் , காந்தர்வம் , அசுரம் , ராட்சசம் , பைசாசம் என்று அழைக்கப்படுகின்றன.   பிரமம்:       ஒரு பெண்ணுக்கு அணிகலன்கள் அணிவித்து , வேதம் கற்று பிரமசாரியாய்     இருப்பவன் ஒருவனுக்கு அவளைத் தானமாகக் கொடுப்பது .   பிரசாபத்தியம்: ஆண் பெண் ஆகிய இருவரது பெற்றோரும் உடன்பட்டு , அந்த ஆணுக்கு       அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது. ஆரிஷம்:     ஒன்றோ இரண்டோ பசுவும் , காளையும் தானமாகப் பெற்றுக்கொண்டு பெண்ணைக்                  கொடுப்பது. தெய்வம்:     வேள்வி செய்வோர் பலருள் ஒருவருக்குத் தன் மகளை வேள்வித் தீ முன்                        மணம் முடித்துத் தருவது. காந்தர்வம்:    கொடுப்போரும் , கேட்போரும் இன்றி ஒரு ஆணும் பெண்ணும் தனி                              இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. அசுரம்:       பெண்ணின் தந்தைக்குப் பணம் கொடுத்து , பெண்ண

முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு பாட்டும் புலவரும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பல புலவர்களால் இயற்றப்பட்ட பல பாடல்களின் தொகுப்பாகிய எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும்   பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்றும் அழைக்கப்படுகின்றன .   பத்துப்பாட்டில் உள்ள பாடல்களில் முல்லைப்பாட்டும் ஒன்று . அது   103 அடிகளைக்கொண்ட சிறிய பாடல்.   இப்பாடல் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது . முல்லைப்பாட்டை இயற்றிய புலவரின் பெயர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன் . இவருடைய பெயருக்கு முன் சிறப்புப் பொருளைத்தரும் ” ந ” என்னும் எழுத்தையும் , பெயருக்குப்பின் , உயர்வைக் குறிக்கும் “ ஆர் ” விகுதியையும் சேர்த்து இவர் நப்பூதனார் என்று அழைக்கப்பட்டார் . நக்கீரனார் , நக்கண்ணையார் , நத்தத்தனார் , காக்கை பாடினியார் நச்செள்ளையார் முதலிய பெயர்களில் ” ந ” என்னும் சிறப்பு எழுத்து   இடம்பெற்றிருப்பதுபோல்   இவர் பெயரிலும் இடம்பெற்றுள்ளது . இவர் இயற்றியதாக முல்லைப்பாட்டு மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது .   இவர் தந்தையார் பொன்வாணிகனார் என்பதும் அவர் சோழநாட்டில் வாழ